Local

இலங்கையில் ATM இயந்திரங்களை பயன்படுத்துவோர் மிக அவதானம்!

நாட்டில் தானியங்கி பணப்பரிமாற்ற இயந்திரங்கள் (ATM) மற்றும் பண வைப்பு இயந்திரங்கள் (CDM) அருகில் இடம்பெறும் புதிய வகையான நிதி மோசடிகள் தொடர்பில் பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

(ATM) மற்றும் (CDM) இயந்திரங்களுக்கு அருகில் மோசடியில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

CDM இயந்திரங்களுக்கு அருகில் நடமாடும் மோசடிக்காரர்கள், தங்களால் பணத்தை வைப்புச் செய்ய முடியவில்லை எனக்கூறி, பொதுமக்களிடம் பணத்தை மாற்றித் தருமாறு கோருகின்றனர்.

ATM இயந்திரங்களை பயன்படுத்துவோர் மிக அவதானம்! பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை | Money Scam Atms And Cdm Machines Police Warning

இதன்போது, ஆரம்பத்தில் 500 ரூபாய் நாணயத்தாளை கொடுத்து இந்த மோசடியை முன்னெடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்பின்னர், பொதுமக்கள் தாம் வழங்கிய பணம் குறித்து நினைவூட்டும்போது, பணத்தை பெற்றுக்கொள்ளவில்லை என கூறி மோசடியில் ஈடுபடுகின்றமை சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, ATM மற்றும் CDM இயந்திரங்களைப் பயன்படுத்தும்போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் தென்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading