World

ஹோர்முஸ் நீரிணையில் மிதக்கும் ஐபோன்கள் : படகில் அள்ளிச்செல்லும் மக்கள்

ஹோர்முஸ் நீரிணையில் கண்ணி வெடியில் சிக்கி சிங்கப்பூர் கொடியுடன் சென்ற சரக்கு கப்பல் தீப்பிடித்து எரிந்தது. இந்த கப்பல் கடலில் மூழ்கிய நிலையில் அதிலிருந்த கொள்கலன்களில் இருந்து ஐபோன்கள், விலையுயர்ந்த வாசனை திரவிய போத்தல்கள் கடலில் மிதக்கின்றன.

இதுபற்றி அறிந்தவர்கள் படகில் சென்று ஐபோன்கள், வாசனை திரவியங்களை மொத்தமாக அள்ளி செல்லும் காணொளி வைரலாகி வருகிறது.

சிங்கப்பூர் கடல்சார் மற்றும் துறைமுக ஆணையத்தின்படி, கப்பலில் இருந்த 21 பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ஜிஎஃப்எஸ் பிரைட் கப்பல், துபாயிலிருந்து ஆடம்பர வாசனைத் திரவியங்கள் மற்றும் ஐபோன்கள் உள்ளிட்ட சுமார் 2,500 கொள்கலன்களை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்த கொள்கலன்கள் கடலில் கவிழ்ந்துள்ள நிலையில், அதிலிருந்த ஏராளமான ஐபோன்கள் மற்றும் விலையுர்ந்த வாசனைத் திரவியங்கள் நீரில் மிதக்கின்றன.

சிலர் படகுகள் மூலம் அந்த கொள்கலன்கள் அருகே வந்து, ஐபோன்களையும், வாசனைத் திரவியங்களையும் அள்ளிச் செல்கின்றனர்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading