Local

இலங்கை ஜனாதிபதி தலைமையில் மக்கள் பேரணி..!!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் எதிர்வரும் செப்டம்பர் 05ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் சிறப்புப் பேரணித் தொடர் ஒன்றை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். களுத்துறையில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், இப்பேரணித் தொடருக்குச் சமாந்தரமாக கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மட்டத்தில் வட்டாரச் சபைகளை மறுசீரமைக்கும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளதாகக் குறிப்பிட்டார். அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் கருத்து நிலவுவதாகக் கூறப்படுவதை நிரூபித்துக் காட்டுமாறு சவால் விடுத்த அமைச்சர், அரசாங்கத்தின் எதிர்கால அரசியல் செயற்பாடுகளையும் அமைப்புக் கட்டமைப்பையும் பலப்படுத்துவதே இந்த நாடு தழுவிய அரசியல் வேலைத்திட்டத்தின் முதன்மை நோக்கம் என்றும் சுட்டிக்காட்டினார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading