தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை..!!
பிரபல பியூ ஆராய்ச்சி மையம் (Pew Research Center) தெற்காசிய பிராந்தியத்தில் நடத்திய புதிய ஆய்வின் முடிவுகளின்படி, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அனைத்து அண்டை நாடுகளின் மக்களாலும் நேர்மறையான மற்றும் சாதகமான எண்ணங்களுடன் பார்க்கப்படும் ஒரே தெற்காசிய நாடாக இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அத்துடன், இலங்கையர்களில் 63 சதவீதம் பேர் இந்தியாவைத் தங்களது மிக முக்கியமான நட்பு நாடாகக் கருதுவதாகவும், இந்திய மக்கள் மத்தியில் இலங்கை மீதான நன்மதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment.