இஸ்ரேலின் அழிவு! சவுதி குடும்ப ஆட்சியில் வீழ்ச்சி!! மத்திய கிழக்கு வரைபடத்தில் மாற்றம்..??
சவூதி அரேபிய சவுத் குடும்ப ஆட்சியின் வீழ்ச்சி.. இஸ்ரேலின் அழிவு .. மத்திய கிழக்கு வரைபடம் மாறும் – அலிஸ்டர் குரூக் கணிப்பு
(ஆர்வம் உள்ளவர்கள் இதை கட்டாயம் படிக்கவும் ,வரலாறுகள் முக்கியம் )
——————————–++-+++—————-
1996 ஆண்டு கால கட்டத்தில் இஸ்ரேல் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் வலுவான சக்தியாகவும் அதே நேரத்தில் பாலஸ்தீனம் மிகவும் பலவீனமாக இருந்த சமயத்தில் ஹமாஸ் போராளிகள் இயக்கத்தில் முக்கிய தலைவரான அஷ் ஷஹீத் அகமது யாசின் அவர்கள் ஒரு முக்கியமான பாலஸ்தீனத்தின் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு கருத்தை அல் ஜசீரா ஊடகத்திற்கு கொடுத்த நேர்காணலில் குறிப்பிட்டார் , அதில் 2027 ஆம் ஆண்டு இஸ்ரேல் என்ற ஒரு தேசமே இருக்காது அது இந்த மத்திய கிழக்கிலிருந்து அடித்து #விரட்டப்படும் என்று கூறினார் அதற்கான பல காரணங்களையும் அவர் அடுக்கினார் இவரது இந்த கருத்தை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாம் பார்த்தால் கூட இது ஒரு எந்த ஒரு #தர்க்கரீதியான அல்லது நடைபெற முடியாத காரியம் என்று தோன்றியிருக்கும்..
ஆனால் தற்பொழுது இவரது இந்த கருத்தை இஸ்ரேலின் முன்னாள் ராணுவ ஜெனரல் #இசாத்பிரிக் 2025 ஆம் ஆண்டு குறிப்பிட்டார் அதில் இஸ்ரேல் இதே போன்ற முட்டாள்தனமான யுத்தங்களின் தொடர்ந்து கொண்டே இருந்தால் அது தனது ராணுவ சக்தியையும் உள்நாட்டு குழப்பங்களையும் வெளிவர அழுத்தங்களையும் அதிகரித்து மூன்று ஆண்டுகளுக்குள் இஸ்ரேல் என்ற தேசம் ஒன்றும் இல்லாமல் போகும் என்று குறிப்பிட்டார்..
இதே போன்ற ஒரு கருத்தை தான் தற்பொழுது மத்திய கிழக்கில் நீண்ட காலமாக பணியாற்றிய பிரிட்டனின் தூதரான #அலிஸ்டர்குரூக் அவர்களும் வெளியிட்டுள்ளார் இவர் மத்திய கிழக்கு பற்றி வெளியிடும் கருத்துக்கள் அனைத்தும் தர்க்கரீதியாக சரியாகவே இருந்துள்ளது ,இதற்கு முன்பு லெபனானின் ஹஸ்புல்லா இயக்க தலைவர் #ஹசன்நசுருல்லா அவர்கள் கொல்லப்பட்ட பொழுது பலரும் ஹிஸ்புல்லா ஒட்டுமொத்தமாக வீழ்ச்சி அடைந்து விடும் என்று கூறினார்..
ஆனால் இதை ஒட்டுமொத்தமாக மறுத்தார் அலிஸ்டர் குரூக் அவர்கள், அவர் ஹிஸ்புல்லாவை பற்றி குறிப்பிடும் பொழுது நான் அவர்களை பல ஆண்டுகளாக பின்தொடர்ந்து வருகிறேன் அவர்களின் பல உயர்மட்ட தலைவர்கள் இளம் தலைவர்கள் என பலரையும் சந்தித்துள்ள அனுபவமும் பெற்றவன் என்ற முறையில் கூறுகிறேன் ஹிஸ்புல்லா இயக்கத்தை பொறுத்தவரை 10 பேர் இருந்தால் கூட அந்த பத்து பேரில் 25 வயது இளைஞன் ஒருவன் அதன் தலைமை பொறுப்பில் இருந்தாலும் கூட அந்த இளைஞனின் செயல்பாடு என்பது மிகவும் ஆக்கபூர்வமாகவும் அடுத்து என்ன செய்ய வேண்டும் எதை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற சிறந்த ராணுவ ஆற்றல் பெற்றவராகவே இருந்து வருகின்றனர் .. காரணம் அவர்கள் #இலக்கு என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு அதற்காகவே அந்த ராணுவம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதனால் hisபுல்லாவின் உயர்மட்ட தலைவர்களை கொல்வதால் எந்த ஒரு பயனும் கிடையாது மாறாக ஹிஸ்புல்லாஹ் தொடர்ந்து தனது வேகத்தில் பயணிக்கும் என்று குறிப்பிட்டார் ,அவர் குறிப்பிட்ட மூன்று ஆண்டுகளில் தொடர்ச்சியாக இது தான் நடைபெற்று வருகிறது இஸ்ரேலால் எதுவும் செய்ய முடியவில்லை அப்பாவி மக்களை கொல்வதை தவிர ..
தற்போது அதே போன்ற ஒரு முக்கியமான கருத்தை சவுதி மற்றும் ஏமன் ஹவுதி ராணுவத்திற்கு இடையேயான போரைப் பற்றி குறிப்பிட்டுள்ளார் ,அதில் அவர் குறிப்பிடும் பொழுது சவுதி #இராணுவத்தின் கட்டமைப்பு என்பது அவர்கள் வெளிநாட்டு #ஆக்கிரமிப்பு அழுத்தங்களுக்கு எதிராக போராடும் ஒரு #ராணுவகட்டமைப்பை கொண்டிருக்கவில்லை ,மாறாக அந்த ராணுவத்தின் உருவாக்கம் என்பது #மன்னர் #ஆட்சியைபாதுகாப்பதற்காக உள்நாட்டு குழப்பங்களை தவிர்ப்பதற்காக உருவாக்கப்பட்டது.. தங்களது குடும்ப உறுப்பினர்களை தவிர்த்த எந்த ஒரு வெளிப்புற சக்தியையும் ராணுவத்தில் மிகப்பெரிய பொறுப்புகளில் நியமிப்பது கிடையாது..
காரணம் 1950 ஆம் ஆண்டுகளில் #ஜெனரல் #நாசரின் எகிப்து போன்ற ஒரு ராணுவ புரட்சி வந்து விடக்கூடாது என்பதால் அது ஒரு #மட்டுப்படுத்தப்பட்ட ராணுவமாகவே உள்ளது மேலும் வெளிநாட்டு அழுத்தங்களிலிருந்து தங்களை பாதுகாப்பதற்காக அவர்கள் மேற்கத்திய நாடுகளிடமிருந்து தான் உதவிகளை பெறுகின்றனர் அதனால்தான் அமெரிக்காவில் மேற்கத்திய நாடுகள் இதன்மூலம் சிறந்த வருவாயை பெறுகின்றனர்
அதனால் அந்த ராணுவத்தால் ஒரு காலமும் #ஏமன்ஹவுதிராணுவத்தை எதிர்த்து எந்த ஒரு வெற்றியும் பெற முடியாது மேலும் சவுதியில் உள்ள ஒட்டுமொத்த அரசு நிர்வாகம் ராணுவ தலைமை பொருளாதாரம் என அனைத்தையும் கட்டுப்படுத்துவது 25 ஆயிரம் உறுப்பினர்களை மட்டுமே கொண்ட சவுது குடும்பம் மட்டுமே.. தற்பொழுது பில் சல்மான் பட்டத்தில் அரசராக நியமிக்கப்பட்டது என்பது அந்த குடும்ப உறுப்பினர்களின் ஒட்டுமொத்த ஆசியில் இடம் பெறவில்லை மாறாக அனைவரையும் மிரட்டி சித்தரவதை செய்து ஹோட்டல்களிலும் சிறைகளையும் அடைத்து தனது ஆட்சியை படித்துக் கொண்டார்..
இதைவிட கூடுதலாக இவரது தாயார் தற்போது மன்னராக உள்ள சல்மானின் மிக நெருக்கமான அன்புக்குரிய மனைவி ஆவார், அதன் மூலமாகத்தான் பட்டத்தில் அரசராக சல்மான் பொறுப்பேற்றார் தற்பொழுது தனது தாயாரை இவர் மன்னரிடம் பேச்சுவார்த்தை நடத்தி பதிவிலிருந்து நீக்கிவிடக்கூடாது என்பதற்காக கிட்டத்தட்ட தனிமை சிறையில் அடைத்து வைத்துள்ளதாகவும் மன்னருடன் எந்த ஒரு மற்ற உறுப்பினர்களும் தொடர்பு கொள்ளக்கூடாது என்பதற்காக தனது நம்பிக்கை மிகு பாதுகாவலர்களை மன்னருக்கு பாதுகாவலராக நியமித்து அவரை ஒரு சிறை கைதியாக வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்..
மேலும் அந்த நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பை தீர்மானிக்கும் எட்டுக்கும் மேற்பட்ட அமைப்புகளின் முக்கிய இளவரசர்கள் அனைவரையும் தூக்கி எறிந்து விட்டு அந்த இடம் அனைத்தையும் அவரே ஆக்கிரமித்து வைத்து கொண்டு உள்ளார் இதைவிட கூடுதலாக பெட்ரோல் உள்ளிட்ட வளங்களை மூலமாக கிடைக்கும் அனைத்து வருமானங்களும் இவரது கட்டுப்பாட்டில் மட்டுமே உள்ளது இதன் மூலம் அவர் தனது சொந்த குடும்பத்தை இழந்து உள்ளார்.
அடுத்து நாட்டு மக்களை பொருத்தவரை கிட்டத்தட்ட #18பழங்குடியின குழுக்களை கொண்ட ஒரு நாடு தான் #சவூதி அரேபியா, அதில் ஒரு பழங்குடியின குழு தான் #அல்சவுதுகுடும்பம் இந்த சவுத் குடும்பம் பிரிட்டனிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதன் மூலம் சவுதி அரேபியாவில் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது இதற்கு முழுமையாக உதவி செய்த நாடு பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள்..
சவுத் குடும்பம் என்னதான் தங்களை #மக்காவின்அறங்காவலர்களாக கூறிக் கொண்டாலும் கூட சவுதியில் உள்ள ஏனைய பழங்குடியின குடும்பங்கள் இதை ஆதரிப்பதில்லை, அவர்களின் வாதப்படி முகமது நபி அவர்கள் குறிப்பிட்ட மக்காவின் பாதுகாவலர்கள் என்பவர்கள் #ஹாஷிம்குலத்தை சேர்ந்தவர்கள் அவர்களுக்கு மக்காவின் பாதுகாப்பில் எந்த ஒரு இடத்திலும் சவுத் குடும்பம் இடம் கொடுக்கவில்லை..
மேலும் நியாம் திட்டம் என்ற பெயரில் பழங்குடியின தலைவர்களின் சொத்துக்களை பட்டத்து இளவரசர் ஆக்கிரமித்துள்ளார், மேலும் பல பழங்குடியின தலைவர்கள் சிறைவாசம் அனுபவிக்கப்பட்டுள்ளனர் கொல்லப்பட்டுள்ளனர் இதுபோக அந்நாட்டு மக்கள் மத்தியில் இவர்களுக்கு எந்த ஒரு ஆதரவும் இல்லை இப்படியான மோசமான காலகட்டத்தில் சல்மான் முட்டாள்தனமாக ஏமன் மீது ஒரு தாக்குதல் நடத்தி உள்ளது அவரது #அழிவை அவரே தேடியுள்ளதாகவே குறிப்பிட்டுள்ளார்..
மேலும் சவுதியில் முன்னாள் பல தலைவர்களும் ஏமனை பற்றிய கருத்துக்கள் என்பது ஏமனுக்கு எதிரான எந்த ஒரு தாக்குதலையும் நாம் அரங்கேற்றக் கூடாது ,காரணம் அது ஒரு #மலைப்பாங்கான பகுதி.. இப்படியான சூழ்நிலையில் முட்டாள்தனமாக ஏமனுக்கு எதிரான தாக்குதலின் மூலமாக தற்பொழுது சல்மானின் பதவியும் அவரது உயிரும் பெரிய ஆபத்தில் உள்ளதாகவும் சல்மானின் உயிருக்கு ஹவுதி ராணுவினிடமிருந்து வரும் ஆபத்தை விட தனது சொந்த குடும்ப உறுப்பினர்களால் அதிகளவு ஆபத்திருப்பதாகவும் அதனால்தான் ஒவ்வொரு நாளும் தான் தங்குமிடங்களை அவர் கூறாமல் #பங்கருக்குள் ஒளிந்து வாழ்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்..
இதே நிலை அதிகபட்சமாக ஓரிரு ஆண்டுகள் வரை நீடிக்கும் அதற்கு மேல் சவுதியின் பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக #பலவீனமாகி தங்களது குடும்ப உறுப்பினர்களுக்குள் பெரிய அளவிலான பிரச்சனை வெடித்து பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு மக்களின் வாழ்வாதாரம் விழும் பொழுது அவரால் அதிக காலத்திற்கு தாக்குப் பிடிக்க முடியாது ஒருவேளை அவர் ஹவுதி இராணுவத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த போரின் நிறுத்தலாம் என்று பார்த்தால் அப்படியான மனநிலை கொண்ட ஒரு மனிதர் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்..
சவுதி வீழ்ச்சியை சந்திக்கும் பொழுது #பஹ்ரேனும் #குவைத்தும் #ஜோடானும் பெரிய வீழ்ச்சியை சந்திக்கும் காரணம் இவர்களுக்கான பாதுகாவலர் என்பது சவுதி மட்டுமே ,
ஏற்கனவே பஹரேன் என்பது #ஈரானுக்கு சொந்தமான பகுதியாக இருந்தது அதேபோன்று குவைத் என்பது ஈராக்கின் #பஷரா மாகாணத்தின் உட்பட்ட பகுதியாக இருந்தது, இதுபோக சவுதியில் தென்பகுதி மலை பாங்கான பகுதிகளான #ஆசீர்நஜீரான் ஜீசான் உள்ளிட்ட பகுதிகளை ஏமனிடமிருந்து பிரிட்டன் உதவியுடன் சவுதி கைப்பற்றியது..
தற்பொழுது நாம் பார்க்கும் மத்திய கிழக்கின் வரைபடங்களின் பாரசீக பேரரசு எகிப்து ஏமன் ஓமன் பகுதிகளை தவிர்த்து பார்த்தால் அனைத்து நாடுகளுமே மேற்கத்திய நாடுகளால் தங்களுக்கு சாதகமாக உருவாக்கப்பட்ட பகுதிகள் மட்டுமே இப்படியாக உருவாக்கப்பட்ட பகுதி என்பது மேற்கத்திய நாடுகளின் ராணுவ பலத்தின் மூலமாகத்தான் இத்தனை ஆண்டுகள் பாதுகாக்கப்பட்டது தற்போது நிலை தொடரும் பொழுது ராணுவ வீழ்ச்சி ஏற்படும்பொழுது இந்த நாடுகளின் ஒட்டுமொத்த வரைபடமும் மாற்றப்பட்டு பழைய நிலைக்கு திரும்பினாலும் ஆச்சரியம் இல்லை..
அடுத்து இஸ்ரேலைப் பற்றி குறிப்பிடும் பொழுது இஸ்ரேல் ஏற்கனவே மிகப்பெரிய உள்நாட்டு மோதலில் சிக்கி உள்ளது தொடர்ச்சியான போர்களில் மூலம் அந்நாட்டின் ராணுவத்திற்கான பற்றாக்குகளையும் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது இதுபோக சுற்றியுள்ள நாடுகளில் இஸ்ரேலுக்கு எதிரான மனநிலை அதிகரித்து அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த ஜோர்டான் சவுதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகளின் பொருளாதாரங்கள் வீழ்ச்சியை சந்தித்து அந்த நாடுகளும் தங்களது மன்னர் ஆட்சியை இழக்கும் சூழ்நிலைக்கு வந்துள்ளனர்..
இந்த நாடுகள்தான் இஸ்ரேலின் அரணாக இத்தனை ஆண்டுகள் இருந்து வந்தன ஒரு வேலை இந்த நாடுகளை இஸ்ரேல் இழந்தால் அதன் பிறகு ஒரு தரை மோதல் என்பது இஸ்ரேலை ஒட்டுமொத்தமாக அழித்து விடும் இவையெல்லாம் இன்னும் ஒரு சில ஆண்டுகளுக்குள் நடைபெறும் என்று எண்ணுவதாக குறிப்பிட்டுள்ளார் அதன் பிறகு மத்திய கிழக்கு வரைபடம் பழைய நிலைக்கு திரும்பும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்..
90களில் அகமது யாசின் உதிர்த்த வார்த்தைகளை தற்போது இஸ்ரேலியர்களும் மேற்கத்தியர்களுமே ஒப்புக் கொள்ளும் அளவிற்கு வந்து இருக்கிறது தற்போதைய இஸ்ரேலின் நிலை .. வெளித்தோற்றத்தில் இஸ்ரேல் என்னதான் அப்பாவி மக்களை இனப்படுகொலை செய்வதன் மூலம் தன்னை பெரிய வீரனாக தனது அடிமை ஊடகங்களின் மூலமாக பரப்பினாலும் எதார்த்தம் என்பது இஸ்ரேல் மிக வேகமாக வீழ்ச்சியை சந்தித்து வரும் ஒரு அழிவை நோக்கி பயணத்தில் உள்ள ஒரு ஆக்கிரமிப்பு தேசம் என்பதே எதார்த்தமான உண்மை. அதை இந்த உலகம் ஓரிரு ஆண்டுகளுக்குள் நிச்சயம் பார்ப்போம்..
இவ்வாறு அந்த தொகுப்பில் குறிப்பிட்டுள்ளார்.
Copied

You must be logged in to post a comment.