ஈரானிய ஏவுகணை! அச்சத்தில் ஐரோப்பிய நாடுகள்!!
ஈரானிய பொலிஸ்டிக் ஏவுகணைகள் ஐரோப்பாவில் இத்தாலி வரை ஒரே வீரியத்துடன் பயணிக்கும் ஆற்றல் கொண்டவை என்பதால் ஐரோப்பிய ஒன்றியம் உடனடியாக ஒன்றுகூடி போர்நிலைமைகள் குறித்து ஆராய்வதாக தெரிவித்துள்ளது.
இதேவேளை ஜேர்மனியிலும் இஸ்ரேலிய படைக்கல முகாம்களும் ஆயுதக்கிடங்குகளும் உள்ளதால் ஜேர்மன் தன்னைப்பலப்படுத்தி வருவதாகவும் சர்வதேச செய்திகள் கூறுகின்றன.
ஈரானிய ஏவுகணைகள் 2500கி மீட்டர் வரை சென்று தாக்குதல் நடத்தும் வலிமை கொண்டவை என நம்பப்படுகிறது.
இதற்கிடையில் ஈரான் இஸ்ரேலுக்கெதிரான புதிய தாக்குதல் எதனையும் மேற்கொள்ளவில்லை. இஸ்ரேலின் பதிலை பொறுத்தே ஈரான் மீளவும் தாக்குதல் தொடுக்குமானால் இந்தப்போர் தொடர வாய்யப்புக்குறைவு என்பதாகவே அவதானிகள் கருதுகின்றனர். சும்மா போலியாக யூ டியுப் காரர்களுக்கு கிடைத்த அவலை பில்டப் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள் போலவே தெரிகின்றது.

You must be logged in to post a comment.