World

ஈரான் உருவாக்கியுள்ள ஏவுகணைகள் ஐரோப்பாவையும் அமெரிக்க நகரங்களையும் தாக்கக்கூடியவை

அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தைகளில் உண்மையான அக்கறை கொள்ளவில்லை என ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த நிலையில், ஈராக்கின் அல்-ஃபாவ் (al-Faw) நகருக்கு தென்கிழக்கே 63 கடல் மைல் தொலைவில் கப்பல் ஒன்று தீப்பற்றி எரிவதாக UKMTO (ஐக்கிய இராச்சிய வர்த்தக நடவடிக்கைகள் பிரிவு) அறிவித்துள்ளது.

எனினும் இந்த கப்பல் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.

பேச்சுவார்த்தை

இதற்கிடையில், சவூதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளை உள்ளடக்கிய புதிதாக அமைக்கப்பட்ட ‘மெக்கா கூட்டமைப்பின்’ உயர்மட்ட அதிகாரிகள் தெஹ்ரானில் ஈரானிய அதிபர் மற்றும் பாதுகாப்புப் பிரதானியைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.

இரு தரப்பும் அமைதியை ஏற்படுத்த தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த, இதன்போது ஒப்புக்கொண்டுள்ளன.

ஈரான் உருவாக்கியுள்ள ஏவுகணைகள் ஐரோப்பாவையும் அமெரிக்க நகரங்களையும் தாக்கக்கூடியவை: ட்ரம்ப் | Iran Has Accused The United States

இதேவேளை, அமெரிக்காவில் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானே போரைத் தொடங்கியது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னைய போர்நிறுத்த ஒப்பந்தத்தை “நேர விரயம்” என்று அவர் கூறியுள்ளார்.

ஈரான் உருவாக்கியுள்ள ஏவுகணைகள் ஐரோப்பாவையும், அமெரிக்க நகரங்களையும் (சாண்டியாகோ, லஸ் ஏஞ்சலஸ் போன்றவை) தாக்கும் திறன் கொண்டவை என அவர் கூறியுள்ளார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading