World

ஈரான் F-35 போர் விமானத்தை வீழ்த்தியதா ?

 

தெஹ்ரான்: ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல், அமெரிக்க தயாரிப்பான F-35 ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை பயன்படுத்தியதாகவும், அதை ஈரான் சுட்டு வீழ்த்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானின் இந்திய தூதரகமும் இந்த தகவலை பகிர்ந்திருக்கிறது. இஸ்ரேல் இதனை மறுத்திருக்கிறது. ஒருவேளை இந்த தகவல் உண்மையெனில், F-35 விமானங்களை வீழ்த்திய முதல் நாடு ஈரானாகத்தான் இருக்கும்.

“ஈரானின் வான் பாதுகாப்புப் படைகள் இரண்டு இஸ்ரேலிய F-35 போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியுள்ளன. மேலும் பல ட்ரோன்களையும் இடைமறித்து அழித்துள்ளன. ஒரு பெண் விமானி கைது செய்யப்பட்டிருக்கிறார் என ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன” என்று ஈரானின் இந்திய தூதரகம் தனது x தளத்தில் பதிவிட்டிருக்கிறது. இதற்கு இஸ்ரேல் மறுப்பு தெரிவித்திருக்கிறது

இஸ்ரேலின் மறுப்புக்கு சில நியாயமான காரணங்கள் இருக்கின்றன. உலகின் மிகவும் வலிமையான, மறைந்திருந்து தாக்கும் திறன் கொண்ட விமானங்களில் F-35 முதன்மையானதாகும். இதை தாக்கி அழிப்பது சவாலானது. உதாரணத்திற்கு கால்பந்து விளையாட்டை எடுத்துக்கொள்வோம். எதிரணி கோல் அடிக்கப்போகிறார்கள் எனில், அவர்கள் எப்படி நகர்கிறார்கள், பந்து எங்கே வருகிறது, எந்த திசையில் கோல் அடிக்க முயற்சிக்கிறார்கள் என்பதை கணித்துவிட முடியும். ஆனால், மைதானத்தில் எதிரணியினர் மாயாஜால வீரர்களாக இருந்தால்? பந்து நகரும்போதுதான், அந்த வீரர் எங்கு இருக்கிறார் என்பதே கண்டுபிடிக்க முடியும். F-35 விமானம்தான் அந்த மேஜிக் வீரர். இந்த விமானத்தின் மேற்பகுதியில் ரேடார்களை உறிஞ்சும் தனித்தன்மை வாய்ந்த கெமிக்கல் பூசப்பட்டிருக்கும். எனவே ரேடாலரில் விமானத்தை கண்டுபிடிக்க முடியாது. அதேபோல, என்ஜினிலிருந்து வெளிவரும் வெப்பமும் குறைவாக இருக்கும். எனவே அகச்சிவப்பு சென்சார்கள் (infrared sensors) கொண்டும் இதை கண்டுபிடிக்க முடியாது.

Tx OneIndia

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading