Local

எல்லாப் பிரச்சினைக்கும் ’19’தான் முழுக் காரணம்! – சீறுகின்றார் விமல்

இப்போதைய எல்லாப் பிரச்சினைகளுக்கும் 19ஆவது அரசமைப்புத் திருத்தமே காரணம் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது:-

“நிறைவேற்று அதிகாரம் பலப்படுத்தப்பட்டிருந்தால் எவரும் நீதிமன்றத்தை நாடியிருக்க முடியாது. 19ஆவது அரசமைப்புத் திருத்தம் கொண்டு வருவதற்கு முன்னர் நாடாளுமன்றத்தைக் கலைத்தபோது எவரும் நீதிமன்றம் செல்லவில்லை. காரணம் நிறைவேற்ற அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமை காணப்பட்டது. இதன்போது எமது தேசியம் பாதுகாக்கப்பட்டது.

பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டிருக்காவிட்டால் சமஷ்டி ஆட்சி குறித்து விவாதம் அரங்கேறியிருக்கும். வடக்கு – கிழக்கு இணைப்பு மற்றும் பொலிஸ் அதிகாரம் ஆகியவை மாகாணங்களுக்கே உரியது எனக் கூறி மத்திய அரசு இவ்விடயங்களில் தலையிட முடியாதெனத் தீர்மானங்கள் எட்டப்பட்டிருக்கும்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading