சந்திரனை அமெரிக்க சொந்தமாக்கிக் கொண்டதாக ட்ரம்ப் அறிவிப்பு.!!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சந்திரன் அமெரிக்காவுக்குச் சொந்தமானது என்று அறிவித்து, தனது ட்ரூத் சோஷியல் (Truth Social) சமூக வலைத்தளப் பக்கத்தில் அடுத்தடுத்து வெளியிட்ட பல பதிவுகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
சந்திரன் அமெரிக்காவுக்குச் சொந்தம் நேற்று
ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவொன்றில், சந்திரனின் படத்துடன் “சந்திரன் நமக்குச் சொந்தமானது” (The Moon is Ours) மற்றும் அமெரிக்கக் கொடியின் குறியீட்டையும் சேர்த்து ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.
விண்வெளிப் படைக்கு புதிய கருப்பு சீருடைகள்
இதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பாக, அமெரிக்க விண்வெளிப் படைக்கு (U.S. Space Force) என AI மூலம் உருவாக்கப்பட்டது போன்ற புதிய கருப்பு நிறச் சீருடைகளின் புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார். “ஸ்பேஸ் கிரே, மிட்நைட் பிளாக், சில்வர் கிரே மற்றும் சாடின் பிளாக்” ஆகிய வண்ணங்கள் கொண்ட இச்சீருடைகளில் தோள்பட்டை முத்திரைகள், பெல்ட் போன்ற அமைப்புகள் காணப்படுகின்றன.
சமூக வலைத்தளப் பயனர்கள் இந்த சீருடைகளை ‘ஸ்டார் வார்ஸ்’ (Star Wars) திரைப்படத்தின் ராணுவ உடைகளுடன் ஒப்பிட்டு விமர்சித்து வருகின்றனர்.

You must be logged in to post a comment.