சமூக வலைத்தள வருவாயில் புதிய சாதனைப் படைத்த விராட் கோலி…!!!
இன்ஸ்டாகிராம் தளத்தில் விளம்பரப் பதிவுகள் மூலம் அதிக வருவாய் ஈட்டும் பிரபலங்களின் பட்டியலில் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். ‘மார்க்கெட்டிங் ஹப்’ (Marketing Hub) அறிக்கையின்படி, கோலி ஒரு விளம்பரப் பதிவிற்கு சுமார் 1.4 மில்லியன் டாலர் (இந்திய ரூபாயில் சுமார் 12 கோடி ரூபா) வருமானமாகப் பெறுகிறார். இதன் மூலம் கால்பந்து ஜாம்பவான்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகியோருக்கு அடுத்தபடியாக, உலகளவில் இன்ஸ்டாகிராம் மூலம் அதிக வருமானம் ஈட்டும் மூன்றாவது நபராக கோலி உருவெடுத்துள்ளார்.

You must be logged in to post a comment.