Local

சுற்றுலா விசா மூலம் அரபு நாடுகளுக்கு செல்லத் தடை!

ஓமான், டுபாய் மற்றும் அபுதாபி உள்ளிட்ட ஐக்கிய அரவு இராஜ்ஜிய நாடுகளுக்கு சுற்றுலா விஸா மூலம் தொழில் வாய்ப்புக்களுக்கு செல்வதை தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதற்கான நடவடிக்கை எடுத்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமார, நாடாளுமன்றத்தில் இன்று இதனை தெரிவித்துள்ளார்.

சுற்றுலா விஸா மூலம், இலங்கையிலிருந்து ஓமானுக்கு வேலைவாய்ப்புக்களுக்காக அழைத்து செல்லப்பட்ட பெண்கள், அங்கு சட்டவிரோத செயற்பாடுகளுக்கு ஈடுபடுத்தப்படுகின்றமை தொடர்பில் வெளியான தகவலை அடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவிக்கின்றார். 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading