World

செயற்கை நுண்ணறிவின் தாக்கம்: பிரான்ஸில் பாப்பரசர் லியோ எச்சரிக்கை

பிரான்ஸுக்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சென்றுள்ள பாப்பரசர் லியோ, செயற்கை நுண்ணறிவின் (AI) தீவிர வளர்ச்சி குறித்து உலக நாடுகளுக்குத் தன் பலத்த கவலையைத் தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவின் பயன்பாடானது மனிதகுலத்தின் அன்றாட வாழ்க்கையைக் கட்டுப்படுத்தி, எதிர்காலத்தில் இயந்திரங்களின் சொர்க்கத்தை உருவாக்கி விடுமோ என்ற அச்சம் நிலவுவதாகவும், இதனைத் தவிர்க்க தர்மாசிரிய வழிகாட்டலும் அறநெறி சார்ந்த கல்வியும் அவசியமாகின்றதெனவும் பிரான்ஸின் எலிசி மாளிகையில் உரையாற்றுகையில் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், கத்தோலிக்க திருச்சபையின் வாழ்வியல் போதனைகளை வலியுறுத்திய அவர், பிரான்ஸில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட விருப்ப மரணத்தை அனுமதிக்கும் சட்டமூலம் குறித்துத் தனது கவலையை வெளிப்படுத்தினார்.

தொழில்முறை இலாபங்களுக்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மரபணு மாற்றம், வாடகைத் தாய் முறை மற்றும் மனித உறுப்பு வியாபாரம் போன்ற செயற்பாடுகளை ஊக்குவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

செயற்கை நுண்ணறிவின் தாக்கம்: பிரான்ஸில் பாப்பரசர் லியோ எச்சரிக்கை | Pope Francis Warns About Artificial Intelligence

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் மற்றும் அவரது மனைவியாரால் உற்சாகமாக வேட்டேற்கப்பட்ட திருத்தந்தை, பாரிஸ் ஓட்லி விமான நிலையத்தை வந்தடைந்ததும் அமைதியின் செய்தியையே கொண்டுவந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பாரிஸ் நோட்ரே – டாம் கதீட்ரல் பேராலயத்தில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டிலும், யுனெஸ்கோ தலைமையகத்தில் உரையாற்றவும் அவர் திட்டமிட்டுள்ளார். சிறுவர் அத்துமீறல் சம்பவங்களால் பிரான்ஸ் கத்தோலிக்கத் திருச்சபைக்கு ஏற்பட்ட பின்னடைவுகளைச் சீர்செய்யும் நோக்கில், லூர்து நகரில் அத்துமீறலால் பாதிக்கப்பட்ட ஏழு பேரைத் திருத்தந்தை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading