15 வயதில் கர்ப்பம்; 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மகனை சந்தித்த தாய்
அமெரிக்காவில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் தத்துக் கொடுக்கப்பட்ட தனது மகனை அவரது தாய் மீண்டும் கண்டுபிடித்து சந்தித்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
ஹாலி என்ற பெண் தனது 15ஆவது வயதில் கர்ப்பமடைந்த நிலையில், குழந்தையை வளர்க்கும் சூழ்நிலை இல்லாத காரணத்தால், அவரை மற்றொரு குடும்பத்திடம் தத்துக் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் சுமார் 20 ஆண்டுகளாக தாயும் மகனும் ஒருவரையொருவர் தொடர்புகொள்ளாமல் இருந்துள்ளனர்.
இந்த நிலையில், முகனூலில் வெளியிடப்பட்ட பிறந்தநாள் வாழ்த்துப் பதிவு ஒன்றின் ஊடாக இருவரும் மீண்டும் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆச்சரியமளிக்கும் வகையில், கடந்த சில ஆண்டுகளாக இருவரும் ஒரே இடத்தில் பணியாற்றி வந்தபோதிலும், தாங்கள் தாய் – மகன் என்ற விடயம் இருவருக்கும் தெரியாமல் இருந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
20 ஆண்டுகளுக்குப் பின்னர் தாயும் மகனும் மீண்டும் சந்தித்துக்கொண்ட இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் கவனம் பெற்றுள்ளது.

You must be logged in to post a comment.