World

டேட்டிங் ஆப்-களை பயன்படுத்தினால் அரசு பண உதவி!

ஜப்பானின் கொச்சி மாகாணம், குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை ஈடுகட்ட ஒரு வினோதமான முயற்சியை எடுத்துள்ளது. அங்குள்ள இளைஞர்கள் டேட்டிங் ஆப்-களை (Dating Apps) பயன்படுத்துவதை ஊக்குவிக்க அரசு பண உதவி வழங்குகிறது.

சுமார் 20 முதல் 39 வயது வரை உள்ள இளைஞர்கள், அரசு அங்கீகரித்த ‘டாப்பிள்’ (Tapple) போன்ற டேட்டிங் ஆப்-களின் சந்தா கட்டணத்திற்காக 20,000 யென் (சுமார் ₹10,500) வரை மானியமாகப் பெறலாம்.

டேட்டிங் ஆப்-களுக்கான வருடாந்திர கட்டணச் சுமையைக் குறைப்பதன் மூலம், இளைஞர்கள் தங்களுக்குப் பிடித்த துணையைத் தேடிக்கொள்ள அரசு உதவுகிறது.

இந்தத் திட்டம் எந்த அளவுக்குப் பலன் அளிக்கிறது என்பதை அறிய, இதில் பங்கேற்கும் இளைஞர்களிடம் பின்னர் கருத்துக்கணிப்பு நடத்தப்படும்.

ஜப்பானில் மக்கள் தொகை குறைந்து வருவது பெரும் கவலையாக உள்ள நிலையில், திருமணங்களையும் பிறப்பு விகிதத்தையும் அதிகரிக்க அந்நாட்டு அரசு இத்தகையப் புதுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading