World

நோபல் பரிசுக்கு 2 அமெரிக்கா அறிஞர்கள் தேர்வு…!!!

2026 nobel prize for economics announced for 2 us economists: 2026 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுக்கு 2 அமெரிக்கா அறிஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

2026 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு

2026 ஆம் ஆண்டுக்கான மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பிறந்த பொருளாதார வல்லுநர்களான ராபர்ட் ஈ. ஹால் மற்றும் மைக்கேல் வுட்ஃபோர்ட் ஆகிய இருவரும் 2026 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யபட்டுள்ளனர்.

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுக்கு 2 அமெரிக்கா அறிஞர்கள் தேர்வு | 2026 Nobel Prize For Economics To 2 Us Economists

பேரியல் பொருளாதார நிலைப்படுத்தலின் நுண்பொருளியல் அடித்தளங்களுக்காக குறித்த இவர்களது பணிக்காக இந்த விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் மற்றும் அரசாங்கங்களால் தற்போது பயன்படுத்தப்படும் மாதிரிகளுக்கு, பரிசு பெற்றவர்களின் பணி ஒரு நிலையான கோட்பாட்டு அடித்தளத்தை நமக்கு வழங்கியுள்ளது,” என்று பொருளாதார அறிவியல் பரிசுக்கான குழுவின் தலைவர் ஜான் ஹாஸ்லர் தெரிவித்துள்ளார்.

6 பிரிவுகளிலும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, ஆல்பிரட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10ஆம் திகதி விருது வழங்கப்பட உள்ளது.

இவர்களுக்கு தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் 12 மில்லியன் ஸ்வீடிஸ் கிரௌன்ஸ் (இந்திய மதிப்பில் ரூ.11.51 கோடி) ஆகியவை பரிசாக வழங்கப்படும்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading