Technology

ரோபோக்களை சரிசெய்யும் அம்புலன்ஸ் அறிமுகம்..!!

ஜப்பான் உலகத்திலேயே முதல் முறையா ரோபோக்களுக்கான ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகப்படுத்தியிருக்கு.

டோக்கியோவை சேர்ந்த GMO Internet Group நிறுவனம் தான் இந்த “Humanoid Ambulance” என்ற புதிய சேவையை கடந்த செப்டம்பர் மாதம் கொண்டு வந்திருக்கு. வேலை செய்யும் இடத்திலேயே பழுதாகி நின்னுடுற மனித உருவ ரோபோக்களை அங்கேயே சரி செய்றதுக்காக இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டிருக்கு.

இது சாதாரண ஆம்புலன்ஸ் மாதிரி இல்ல. உள்ளே திறமையான பொறியாளர்கள், பழுது கண்டுபிடிக்கிற கருவிகள், தேவையான உதிரி பாகங்கள், மாற்று ரோபோக்கள் எல்லாமே இருக்கும் நடமாடும் பழுதுபார்க்கும் மையமா செயல்படும்.

ஒரு ரோபோ உடனடியா சரி செய்ய முடியாத அளவுக்கு பழுதாகியிருந்தா, அதை சர்வீஸுக்கு எடுத்துட்டு போயிட்டு, அதுக்கு பதிலா வேற ஒரு நல்ல ரோபோவை அங்கேயே கொடுத்துடுவாங்க.

கிடங்குகள், ஹோட்டல்கள், விமான நிலையங்கள் போன்ற இடங்களில் மனித உருவ ரோபோக்களின் பயன்பாடு அதிகமாகிட்டு வர்றதால, வேலை தடைபடும் நேரத்தை குறைக்க இது உதவும் என்று சொல்லப்படுது. பழுதான ரோபோவை தூக்கிட்டு போய் சரி செய்து திரும்ப கொண்டு வர காத்திருக்காம, இடத்திலேயே உதவி கிடைக்கும் என்பது தான் இதன் சிறப்பு.

#JapanTechnology #HumanoidRobots #FutureTech #Robotics

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading