போரினால் இஸ்ரேலிய கல்வித் துறையில் வீழ்ச்சி..!!
🇮🇱 ” போரினால் சீர்குலைந்த கல்விச் சூழல்: PISA சர்வதேசியக் தேர்வில் வரலாற்றில் இல்லாத அளவிற்குச் சரிந்த இஸ்ரேல்!” 🇮🇱
தொடர் போர்கள், பள்ளிகள் மூடப்பட்டமை, ஆன்லைன் வகுப்புகளின் சீரற்ற நிலை மற்றும் ஈரான் உடனான மோதல்கள் காரணமாக, சர்வதேச மாணவர் மதிப்பீட்டுத் தேர்வில் (PISA) இஸ்ரேலிய மாணவர்களின் மதிப்பெண்கள் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிக மோசமான சரிவைச் சந்தித்துள்ளன.
பொருளாதார கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (OECD) 15 வயதுடைய மாணவர்களுக்கு நடத்தப்படும் PISA 2025 சர்வதேசத் தேர்வின் முடிவுகள் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8, 2026) வெளியிடப்பட்டன. இதில் இஸ்ரேலின் கல்வித் தரம் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் வீழ்ச்சியடைந்துள்ளது தெரியவந்துள்ளது.
2006-க்குப் பிறகு பதிவான மிக மோசமான சரிவாக இது கருதப்படுகின்றது.
வாசிப்புத் திறன் (Reading) 38 புள்ளிகள் சரிந்து 436 ஆக வீழ்ச்சி. (OECD வரலாற்றிலேயே ஒரே சுழற்சியில் 35 புள்ளிகளுக்கும் மேல் சரிந்தது இதுவே முதல் முறை).
கணிதம் (Mathematics) 25 புள்ளிகள் சரிந்து 433 ஆக வீழ்ச்சி.
அறிவியல் (Science) 23 புள்ளிகள் சரிந்து 442 ஆக வீழ்ச்சி.
அடிப்படைத் தகுதியற்ற மாணவர்கள் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கணிதத்தில் 46%, வாசிப்பில் 41% மற்றும் அறிவியலில் 40% இஸ்ரேலிய மாணவர்கள் அடிப்படை கற்றல் தகுதியற்றவர்களாக (Low Performers) வகைப்படுத்தப்பட்டுள்ளனர். உயர் திறன் கொண்ட மாணவர்களின் (Top Performers) விகிதம் 11%-லிருந்து 5%-ஆகக் குறைந்துள்ளது.
மற்ற OECD உறுப்பு நாடுகளில் கொரோனா மற்றும் பிற சூழல்களால் கணிதத்தில் 9 புள்ளிகளும், வாசிப்பில் 14 புள்ளிகளும் மட்டுமே சரிவடைந்த நிலையில், இஸ்ரேலில் போரினால் ஏற்பட்ட கல்விச் சீர்குலைவு காரணமாக இந்த வீழ்ச்சி 3 மடங்கு அதிகமாகப் பதிவாகியுள்ளது.
தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைகள், இடம்பெயர்வு மற்றும் ஆன்லைன் கற்றலில் ஏற்பட்ட சுமை ஆகியவை மாணவர்களின் மன நலனையும் கற்றல் திறனையும் கடுமையாகப் பாதித்துள்ளதாகக் கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
யோவ் கிஷ் (Yoav Kisch – இஸ்ரேலியக் கல்வி அமைச்சர் குறிப்பிடுகையில் “இந்த நெருக்கடியான போர்க்காலச் சூழலில் கல்வித்துறை தங்களால் முடிந்த சிறந்த சேவையை வழங்கியது. PISA மதிப்பீட்டு முடிவுகள் கடந்த 3 ஆண்டுகளில் நிகழ்ந்த மாற்றங்களையும், முக்கியமாக நாட்டின் போர்ச் சூழல் கல்வி அமைப்பில் ஏற்படுத்திய தாக்கத்தையும் பிரதிபலிக்கின்றன.”

You must be logged in to post a comment.