Local

மகிந்தவின் முடிவால் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு 528 பில்லியன் ரூபா நட்டம்!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தனிப்பட்ட விவகாரம் ஒன்றின் காரணமாக 2008-ஆம் ஆண்டில் எமிரேட்ஸ் நிறுவனத்துடனான கூட்டாண்மையை ரத்து செய்ததிலிருந்து, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மொத்தம் 528 பில்லியன் ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று ( 12) நடைபெற்ற 2027-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட உரையின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்த அவர்,

2008 ஆம் ஆண்டு எமிரேட்ஸ் நிறுவனமானது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சுவீகரித்ததற்கு ஒரு தனிநபரின் விவகாரம் தான் காரணம்.

தனது பாதுகாவலருக்கு விமானங்களில் ஆசனம் வழங்காத காரணத்தினால் அந்த எமிரேட்ஸ் நிறுவனத்துடனான கூட்டாண்மையை முடிவுக்குக் கொண்டு வர முடிவு செய்ததாகவும், அதன் விளைவாகவே இந்த இழப்புகள் ஏற்பட்டன.

அதனால் 528 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து இதுவரை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம்பொது திறைசேரிக்கு சுமையாக இருந்து வருகின்றது.

அதற்கு தேவையான தீர்வுகளை கண்டறிவதற்கு தற்போது அமைச்சரவையினால் புதிதாக குழுவொன்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எயார்பஸ் கொள்வனவு செய்வதற்கும், இரத்து செய்வதற்கும் என கொடுக்கல் வாங்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறுதான் கடந்த கால ஆட்சியாளர்கள் நாட்டிற்கு சேதத்தை ஏற்படுத்தினார்கள்.

இன்றும் கூட அந்த நிறுவனங்களை பாதுகாப்பதற்காக, பொதுமக்களுடைய வரித்தொகையில் பல மில்லியன் ரூபாய் செலவழிக்கின்றோம் என குறிப்பிட்டார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading