முஹம்மத் நபியை இழிவுப்படுத்திய சவுதி பெண்ணுக்கு மரண தண்டனை..!!
கைது செய்யப்பட்ட சவூதி பெண்ணுக்கு மரண தண்டனை! சவுதி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
அண்மையில் சவுதி அரேபியாவைச் சேர்ந்த “சாரா திவா” என்ற பெண் சவுதி அரேபிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட விவகாரத்தின் பின்னணியில், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த அக்டோபர் 06-ஆம் தேதி சவுதி அரேபியாவின் தலைநகரமான ரியாத் நகரில் வைத்துக் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் “சாரா திவா” என்பவர், “2030-க்குள் நிகாப் வேண்டாம்” என்று சமூக வலைத்தளத்தில் இஸ்லாமிய மார்க்கத்திற்கு முரணாகவும், முகமது நபி அவர்களை விமர்சித்தும் டிக் டாக் காணொளி ஊடாகப் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும், பலத்த கண்டனங்களுக்கு மத்தியிலும் சவுதி அரேபிய காவல்துறையினரால் தேடப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட பெண்ணை விசாரணைக்கு உட்படுத்திய காவல்துறையினர், அவருடைய சமூக வலைத்தளக் கணக்கில் குறித்த காணொளி தொடர்பான ஆதாரங்களைக் கண்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து அவரது சமூக வலைத்தளக் கணக்குகள் முடக்கப்பட்டு, இம்மாதம் 11-ஆம் தேதி வரை அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, இன்று சவுதி அரேபியாவின் ரியாத் சிறப்பு குற்றவியல் நீதிமன்றம் (Specialized Criminal Court – SCC) அவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
சவுதி அரேபியாவின் சட்ட அமைப்பு இஸ்லாமிய ஷரீஆ சட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. குற்றம் சட்ட நடைமுறைகளின்படி நிரூபிக்கப்பட்டால், குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப கடுமையான தண்டனைகள்—சிறைத்தண்டனை முதல் மரண தண்டனை வரை—விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment.