தங்கச்சுரங்கம் மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 200 பேர் பலி.!
வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சூடான். எகிப்து அருகே அமைந்துள்ள இந்நாட்டில் உள்நாட்டுப்போர் நிலவி வருகிறது.
ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேவேளை, சூடானில் பல்வேறு சட்டவிரோத தங்கச்சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதனிடையே, சூடான் அருகே அமைந்துள்ள நாடு எகிப்து. இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப்பிரச்சினை நிலவி வருகிறது. குறிப்பாக, எகிப்து – சூடான் எல்லையில் சூடானில் தங்க சுரங்கங்கள் அதிகம் நிறைந்த ஹலைப் டிரையாங்கில் பகுதியை எகிப்து உரிமைகோரி வருகிறது.
மேலும், அப்பகுதியில் உள்ள தங்கச்சுரங்கங்களில் சட்டவிரோதமாக தங்கத்தை வெட்டி எடுப்பவர்கள் மீது எகிப்து அவ்வப்போது தா**க்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், சூடான் – எகிப்து எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ‘ஜபல் அல்-உகாய்தாத்’ (Jabal al-Uqaydat) என்ற முக்கிய தங்கச் சுரங்கப் பகுதியின் மீது அக்டோபர் 10 (சனிக்கிழமை) அன்று இந்த சக்திவாய்ந்த வான்வழித் தா**க்குதல் (Airstrikes) நடத்தப்பட்டது.
எகிப்து இந்த தா**க்குதலை நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த வான்வழித் தா**க்குதலில் தங்கச் சுரங்கத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த குறைந்தது 72 முதல் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உ**யி**ரிழந்துள்ளனர் என்றும், பல நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதுடன் அப்பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர் என்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இத் தா**க்குதலை அடுத்து நிலைமை தீவிரமடைந்துள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You must be logged in to post a comment.