World

Admission Offer-களை திரும்பப்பெறும் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள்

UK Universities Cancel Offers Amid Visa Refusals: பிரித்தானிய பல்கலைக்கழகங்கள், சர்வதேச மாணவர்களுக்கு வழங்கியிருந்த சேர்க்கை வாய்ப்புகளை (admission offers) திரும்பப்பெறத் தொடங்கியுள்ளன.

பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா, வங்காளதேசம் போன்ற நாடுகளின் மாணவர்களுக்கு வழங்கியிருந்த சேர்க்கை வாய்ப்புகளை திரும்பப் பெற்றுவருகின்றன.

UK-Universities-Cancel-Offers-Amid-Visa-Refusals

காரணம், பிரித்தானிய அரசாங்கம் விசா மறுப்பு விகிதத்தை 5 சதவீதத்திற்குக் கீழே வைத்திருக்க வேண்டும் என்ற புதிய விதி தான்.

பல்கலைக்கழகங்கள், இந்த விதியை மீறினால் மாணவர் அனுமதி வழங்கும் உரிமையை இழக்க நேரிடும் என்பதால், விசா மறுக்கப்பட வாய்ப்புள்ள மாணவர்களின் சேர்க்கையை முன்கூட்டியே ரத்து செய்கின்றன.

இதனால், மாணவர்கள் விண்ணப்பித்திருந்த விசா விண்ணப்பங்களும் தானாகவே திரும்பப்பெறப்படுகின்றன.

2026-ஆம் ஆண்டின் முதல் பாதியில், பிரித்தானியாவில் 10.5 சதவீத மாணவர் விசா விண்ணப்பங்கள் திரும்பப்பெறப்பட்டன. 2025-இல் 2.3 சதவீதம் மற்றும் 2023-இல் 0.4 சதவீதம் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒப்பீட்டளவில் இது மிக மிக அதிகம்.

பாகிஸ்தான் மாணவர்களின் விண்ணப்பங்களில் 40.9 சதவீதம் திரும்பப்பெறப்பட்டுள்ளன. நைஜீரியா மாணவர்களின் விகிதம் 22.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. வங்காளதேசம் மாணவர்களின் விகிதம் 23.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்திய மாணவர்கள் 2025-இல் 1.2 சதவீதத்தில் இருந்தது, 2026-இல் 5.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.

பல்கலைக்கழகங்கள், “விசா மறுப்புகள் அதிகரித்ததால், சில நாடுகளில் இருந்து மாணவர்களை சேர்ப்பதை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளன. பிரித்தானிய அரசு, “உண்மையான மாணவர்களை வரவேற்கிறோம், ஆனால் விசா முறையை தவறாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளது.

மொத்தத்தில், இந்த நடவடிக்கை இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா மாணவர்களின் வெளிநாட்டு கல்வி கனவுக்கு பெரிய சவாலாக மாறியுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading