Local

வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்!

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்படி, வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பில் ஆதரவாக 121 வாக்குகளும் எதிராக 84 வாக்குகளும் கிடைத்தன.

இதேவேளை, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் வாக்களிக்க வரவில்லை.

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வாக்களித்த போதிலும், நாடாளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திஸாநாயக்க, பிரியங்கர ஜயரத்ன, ஜோன் சேனவிரத்ன ஆகியோர் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஜீவன் தொண்டமான் ஆதரவாக வாக்களித்துள்ளார். எனினும், பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் வாக்களிக்க வரவில்லை.

கடந்த 14ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் என்ற வகையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 2023ஆம் ஆண்டு 7885 பில்லியன் ரூபாவை அரச செலவீனமாக ஒதுக்க முன்மொழிந்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading