Technology

ஆண்களின் மூளையை விட பெண்களின் மூளை இளமை!

ஆண்களின் மூளையை விட பெண்களின் மூளை தங்கள் வயதை விட இளமையோடு இருப்பதாக அமெரிக்க ஆய்விதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

20 வயது முதல் 80 வயதுடையோருக்கான இந்த ஆய்வில் 121 பெண்களும், 84 ஆண்களும் பங்கேற்றனர்.
அதில் மூளையின் வளர்சிதை மாற்றம் குறித்த ஆய்வில் அதனுள் உள்ள குளுகோஸ் மற்றும் காற்றோட்டத்தின் அளவு பரிசோதிக்கப்பட்டது.
அதில் கிடைத்த முடிவின் படி ஆண்களின் மூளை தங்கள் வயதை விட 2 ஆண்டுகள் 4 மாதங்கள் வரை முதியதாகவும், பெண்களின் மூளை தங்களின் வயதை விட 3 ஆண்டுகள் 8 மாதங்கள் இளையதாக இருப்பதாகவும்
தேசிய அறிவியல் அகாடமியின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்விதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
இது வயது வேறுபாடின்றி கிடைத்த சமச்சீரான முடிவு எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading