Lead NewsLocal

வெடிபொருட்களுடன் 20 வாகனங்கள் தெற்கிலிருந்து வடக்குக்குள் நுழைவு! – பாதுகாப்புப் பிரிவு அதிர்ச்சித் தகவல்

வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களுடன் தெற்கிலிருந்து வடக்குக்குள் 20 வாகனங்கள் பிரவேசித்துள்ளன என்று பாதுகாப்புப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 மோட்டார் சைக்கிள்கள், 2 வான்கள், 2 கெப் ரக வாகனங்கள், ஓட்டோ 1, டீமோ பட்டா லொறி 1, கார்கள் 2 இவ்வாறு வடக்குக்குள் நுழைந்துள்ளன எனவும் ​தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, வவுனியாவில் நிரந்தர இராணுவ வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நேற்றுத் தொடக்கம் குறித்த வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வாகனங்களின் இலக்கங்கள் உள்ளடங்கலான தகவல்கள் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ள இடங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading