Local

ஹிஸ்புல்லாவின் பாதுகாப்பு அதிகாரி மோதரைப் பொலிஸாரிடம் சிக்கினார்!

கிழக்கு மாகாண ஆளுநர் எம். எல். ஏ. எம்.ஹிஸ்புல்லாவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஹிஸ்புல்லாவின் பாதுகாப்பு அதிகாரியான மொஹமட் மர்சுக் மொஹமட் ரஸ்லி என்பவரே மோதரைப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அரச அதிகாரிகளின் இறப்பர் முத்திரைகளை வைத்திருந்தமையால் சந்தேகத்தின் பேரில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மோதரையிலுள்ள அவரது வீட்டில் 5 இறப்பர் முத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.

சமகால ஆளுநர் ஹிஸ்புல்லா இராஜாங்க அமைச்சராகச் செயற்பட்ட காலப்பகுதியில் பயன்படுத்திய இறப்பர் முத்திரைகளும் அதில் அடங்குகின்றனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading