Cinema

ரஜினிக்கு ஜோடியாகும் வாய்ப்பை தவறவிட்ட மீரா!

சூர்யா – விக்னேஷ் சிவன் கூட்டணியில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்தவர் மீரா மிதுன்.

அதற்கு முன்பே 8 தோட்டாக்கள் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்த இவர், இந்த படத்தின் மூலம் இன்னும் அதிகம் கவனிக்கப்பட்டார்.

மிஸ் சௌத் இந்தியா அழகி பட்டத்தை வென்ற இவர் சென்னையைச் சேர்ந்த அக்மார்க் தமிழ் பொண்ணு.

படிப்பு, நடனம் என்று மட்டுமே இருந்த இவரை அவரது உயரமும் நிறமும் ஒரு மொடல் அழகியாகவே பலருக்கும் தோன்றச் செய்தது.

மொடலிங், சினிமா இரண்டிலுமே சமமான கவனம் செலுத்தவே விரும்புகிறார் மீரா மிதுன்.

மொடலிங்கில் இருந்தபோதே இவரை ஊக்கப்படுத்தி அவ்வப்போது உற்சாகம் கொடுத்த நடிகர் விஷால், சினிமாவிற்கு வருமாறு முன்பே அழைப்பு விடுத்திருக்கிறார்.

ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் நடிப்பதற்காக ஆடிஷனுக்கு அழைக்கப்பட்ட மீரா மிதுன், லுக் டெஸ்ட், ஸ்கிரீன் டெஸ்ட் வரை சென்றுவிட்டார். ஆனால், ஏதோ சில காரணங்களால் அந்த வாய்ப்பு அவருக்கு கைகூடாமல் போய்விட்டது. அவருக்குப் பதிலாக பின்னர் அந்த கேரக்டரில் நடித்தவர் திரிஷா என சமீபத்தில் தான் மீராவுக்கு தெரியவந்திருக்கிறது.

அதேபோல கமல் தயாரிப்பில் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘கடாரம் கொண்டான்’ படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் மீரா மிதுன்.

அதுவும் சில காரணங்களால் கடைசி நேரத்தில் இவரை விட்டு விலகிப்போனது.

விலகிப்போன வாய்ப்புகள் மீண்டும் வேறு வடிவத்தில், வேறு படங்களில் தன்னைத் தேடிவரும் என திடமாக நம்புகிறார் மீரா மிதுன்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading