Lead NewsLocal

அமெரிக்காவின் நேரடி ஆட்டம் ஆரம்பம்! அவசரமாகக் கொழும்பு வந்தார் தூதுவர்!!

இலங்கையின் அரசியல் கொந்தளிப்பு சர்வதேச மட்டத்தில் பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ள சூழ்நிலையில், இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் கொழும்பை வந்தடைந்துள்ளார்.

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்ட அலய்னா ரெப்லிட்ஸ் கடந்த வாரம் வொஷிங்டனில் நடந்த நிகழ்வில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருந்தார்.

அவர் இலங்கையில் கடமைகளைப் பொறுப்பேற்கத் தயாராகி வந்த நிலையில், திடீரென கொழும்பில் சடுதியான அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன.

அமெரிக்காவுக்கும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய இந்த அரசியல் மாற்றங்களை அடுத்து அவசர அவசரமாக அலய்னா ரெப்லிட்ஸ் நேற்று கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை கொழும்பு வந்து சேர்ந்த அவர் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

இலங்கையில் அரசியல் குழப்ப நிலை ஏற்படக் காரணமான அரசியல் தலைவர்களை அவர் தனித்தனியே சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார் என அறியமுடிகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading