Cinema

ஆர்யா – சாயிஷாவுக்கு மார்ச் 10இல் டும்.. டும்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஆர்யாவுக்கும் வளர்ந்து வரும் நடிகையான சாயிஷாவுக்கும் எதிர்வரும் மார்ச் 10ஆம் திகதி திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுக்கள் பரவின.

சாயிஷா தமிழில் வனமகன், கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

கஜினி காந்த் படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. இதனை இருவரும் மறுக்கவில்லை.

இந்தநிலையில், ஆர்யாவுக்கும் சாயிஷாவுக்கும் வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதி திருமணம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹைதராபாத்தில் இவர்களது திருமணம் நடக்க இருப்பதாகக் கூறப்படுகின்றது. திருமணத்துக்கான ஏற்பாடுகளில் இருவரும் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading