LocalNorth

அண்ணனைக் கொட்டனால் அடித்துக் கொன்ற தம்பி! – பருத்தித்துறையில் பயங்கரம்

யாழ்ப்பாணம், பருத்தித்துறையில் இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதல் உயிரிழப்பில் முடிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று நள்ளிரவு அண்ணன் – தம்பி ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியுள்ளனது.

இதன்போது தம்பியின் தாக்குதலுக்கு இலக்காக அண்ணனே உயிரிழந்துள்ளார்.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பணக் கொடுக்கல் – வாங்கல் விவகாரமே கொலைக்குக் காரணம் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நெல்லியடி, வதிரி பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 38 வயது சிறிரங்கநாதன் சுதாகரன் என்பவரே உயிரிழந்தார்.

அண்ணன் – தம்பிக்கு இடையில் வாய்த்தர்க்கம் இடம்பெற்றதென்றும் அது கைகலப்பாக மாறி கொட்டனால் அடிக்கப்பட்டதால் கொலையில் முடிந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்த தம்பி மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றாா்.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading