Lead NewsLocal

அடுத்த ஜனாதிபதியை சு.கவே தீர்மானிக்கும்! – ‘மொட்டு’டன் கூட்டணி அவசியமில்லை என்கிறார் துமிந்த

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் கூட்டணியமைக்கவோ அல்லது அந்தக் கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவையோ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குக் கிடையாது.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தலாகும். இந்தநிலையில், நாட்டின் அடுத்த ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் பொறுப்பைக் கையிலெடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.

இதற்காக அனைவரும் ஒன்றிணையும் சந்தர்ப்பத்தில் குறித்தவொரு கட்சியின் சின்னத்தை மாத்திரம் பயன்படுத்தாது பொதுச் சின்னத்தைத் தெரிவு செய்வதே பொறுத்தமாக இருக்கும்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading