Local

காதலியை இன்று கரம்பிடித்த நாமல்!

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான மஹிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரான நாமல் ராஜபக்ச இன்று தனது காதலியுடன் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்.

சுற்றுலாத்துறையில் பிரபல வர்த்தகரான திலக் வீரசிங்கவின் புதல்வியான லிமினி வீரசிங்க என்பவரை அவர் இன்று காலை பதிவுத் திருமணம் செய்து கொண்டார்.

இந்தப் பதிவுத் திருமண நிகழ்வு கொழும்பு கங்காராம விகாரையில் சமய சடங்குகளுடன் நடைபெற்றது. இதில் நாமல் ராஜபக்சவின் சகோதரர்கள் மற்றும் மஹிந்த ராஜபக்சவின் சகோதரர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இன்று மாலை தங்காலையில் உள்ள மஹிந்த ராஜபக்சவின் இல்லத்தில் திருமண நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் பலருக்கும் நாமல் தனித்தனியாக அழைப்பு விடுத்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading