Local

மஹிந்தவின் சர்வாதிகார குடும்ப ஆட்சிக்கு முடிவு!

மஹிந்த ராஜபக்ஷவின் சர்வாதிகார குடும்ப ஆட்சியானது முடிவுக்கட்டத்தை எட்டிக்கொண்டிருப்பதாக பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டை மொத்தமாக விழுங்கிவிடும் மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப உறவினர் ஆட்சி முறை எதிர்வரும் 2019ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வந்துவிடும்.

மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் பலதரப்பட்ட தரப்பினருடன் உடன்படிக்கைகைகளை மேற்கொண்டு தமது நிலையைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கின்றார்கள். ஆனால், அந்த யுகம் மீண்டும் அவர்களுக்கு வராது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை முழுமையாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியாக்குவதே மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரின் நோக்கமாக இருக்கின்றது” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading