Cinema

பிரபல நடிகை ‘ராகினி’யால் ஸ்டார் ஹோட்டலில் சண்டை! – உடைந்தது நண்பனின் மண்டை

தமிழ், தெலுங்கு, மலையாளம் என நடித்துப் புகழ் பெற்றவர் ராகினி திவேதி. இவர் தமிழில் ஜெயம் ரவி நடித்த நிமிர்ந்து நில் படத்தில் நடித்திருந்தார்.

இவர் நேற்று தன் நண்பர் RTO அதிகாரி ஒருவருடன் பெங்களூரில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றுக்குச் சென்றுள்ளார்.

அங்கு ராகினியின் மற்றொரு நண்பர் சிவப்பிரகாஷும் வந்துள்ளார். ராகினியுடன் மற்றொருவர் இருப்பதைப் பார்த்த சிவப்பிரகாஷ் முதலில் சண்டை போட்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து RTO அதிகாரியைத் தாக்கியுள்ளார். இதன்போது RTO அதிகாரியின் மண்டை உடைந்துள்ளது.

இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. அதைத் தொடர்ந்து அந்த RTO அதிகாரி அருகில் இருந்த வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading