Lead NewsLocal

கொச்சிக்கடையில் மீண்டும் குண்டுவெடிப்பு!

கொழும்பு, கொச்சிக்கடையில் ​சற்று முன்னர் குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு அருகிலுள்ள ரட்ணம் ஒழுங்கையில் வாகனமொன்றில் வெடிகுண்டு இருக்கின்றது எனக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, அங்கு சென்ற குண்டு செயலிழக்கும் பிரிவினர் அதைச் செயலிழக்கச் செய்ய முற்பட்டபோதே குறித்த குண்டு வெடித்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற பகுதியில் முப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கோட்டை ரயில் நிலையத்துக்கு அருகில் இருந்து சந்தேகத்துக்கிடமான பொதியொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

நாட்டில் நேற்று 8 இடங்களில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 290 இற்கும் மேற்பட்டோர் பலியாகியதுடன் 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading