Local

மஹிந்த அணி உறுப்பினர் சுட்டுக்கொலை!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஹக்மன பிரதேச சபை உறுப்பினர் எல்.எச்.சாந்த சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

ஹக்மன – பெலிஅத்த வீதியின் கெபிலியபொல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த எல்.எச்.சாந்த, ஹக்மன வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.

பாதை ஓரமாக நின்ற இவர் மீது வான் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

நேற்று மாலை 4.30 மணியளவில் இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading