Local

மஹிந்தவை அவசர அவசரமாக சந்தித்த அமெரிக்க அதிகாரிகள்!

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவை அவசர அவசரமாக சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய, ஆசிய விவகாரங்களுக்கான முதன்மைப் பிரதி உதவிச் செயலாளர் அலைஸ் வெல்ஸ்.

கொழும்பு 07, விஜயராம மாவத்தையிலுள்ள மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று பகல் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அமெரிக்கக் குடியுரிமையை இரத்துச் செய்துள்ளார் எனக் கூறப்பட்டும் கோட்டாபய ராஜபக்சவை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகும் கட்சியின் தேசிய மாநாட்டில் மஹிந்த அறிவிக்கவுள்ள நிலையில், மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி டெப்பிளிட்ஸ், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading