EastLocal

மூதூரில் ஆற்றில் மூழ்கி மாணவன் மரணம்!

மூதூரில் 16 வயது மாணவன் ஒருவர் ஆற்றில் மூழ்கி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

ஜின்னா நகர் மூதூர் – 02 ஐச் சேர்ந்த ஜி.சீ.ஈ. சாதாரண தர மாணவன் நஜீப் அதீப் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் அவரது நண்பர்களுடன் ஆலிம்சேனை எனப்படும் இடத்திலுள்ள ஆறு ஒன்றில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் குளிக்கச் சென்ற வேளையிலேயே நீரில் மூழ்கியுள்ளார்.

பின்னர் அவ்விடத்தில் இருந்த பொதுமக்களின் உதவியுடன் அவர் காப்பாற்றப்பட்டு மூதூர் வைத்தியசாலைக்கு பிற்பகல் 3 மணியளவில் சேர்க்கப்பட்டார். எனினும், அங்கு அவர் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவனின் சடலம், மரண விசாரணை அதிகாரியின் அறிக்கையின் பின்னர் குடும்பத்தினரிடம் இன்றிரவு 7 மணியளவில் ஒப்படைக்கப்பட்டது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading