EastLocal

சபைத் தலைவராக நஸீர் அஹமட் நியமனம்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் உள்ள தேசிய தொழில்முறை பயிற்சி மற்றும் திறன்வளர்ச்சி அமைச்சின் தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் தலைவராக கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் நஸீர் அஹமட் பிரதமரால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்:-

“இளையவர்களின் வளர்சிக்கும் அவர்தம் வாழ்வியல் மேம்பாட்டுக்கும் இந்தப் பொறுப்புமிகு பதவியின் மூலமாக எதிர்காலத்தில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடியும்.

குறிப்பாக தற்போது நாட்டில் அதிகரித்துவரும் வேலையில்லாப் பிரச்சினைகளுக்கு இதனூடாக ஓரளவு தீர்வுகளை எட்ட முடியும்.

இந்த நோக்கமும் எண்ணமும் நிறைவேற வேண்டும் என்ற நோக்கில் என்னை இப்பதவிக்கு நியமித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் எனது வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்வடைகின்றேன்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading