Local

வான் – பவுசர் நேருக்கு நேர் மோதல்! பெண் ஒருவர் பலி; 5 பேர் படுகாயம்!!

புத்தளம் – ​கொழும்பு பிரதான வீதி ஆராய்ச்சிக்கட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 5 பேர் படுகாயமடைந்து சிலாபம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 02.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வான் ஒன்றும் பவுசர் ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டு குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

வெள்ளவத்தை பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய பெண்ணே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

திருமண வீடொன்றுக்கு சென்றுவிட்டு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வான் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஆராய்ச்சிக்கட்டுவப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading