Cinema

இரசிகர்களுக்கு ஓவியா இன்ப அதிர்ச்சிச் செய்தி!

பிக்பாஸ் மூலம் தமிழ் சினிமா இரசிகர்களுக்கு மிகவும் தெரிந்த முகமாக மாறியவர் ஓவியா.

அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்த போதே ஆர்மி எல்லாம் ஆரம்பித்து இரசிகர்கள் அமர்களப்படுத்தினர்.

அவர்களின் அன்பு இன்னும் கூட துளியும் குறையாமல் இருக்கும் நிலையில் ஓவியா 90 ML என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த வாரம் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் பேசிய ஓவியா,

“எனது தொலைபேசி இலக்கத்தை அதிகமானோர் கூகுளில் தேடுவதாக கேள்விப்பட்டேன். எனக்கும் உங்களிடம் பேச ஆசையாகத்தான் உள்ளது.

அதனால் கண்டிப்பாக விரைவில் எனது இரசிகர்களுக்காக – இரசிகர்களுக்காக எனச் சொல்லக் கூடாது எனது நண்பர்களுக்காக மீட்டிங் மாதிரி ஒன்றை தயார் செய்து அழைக்கின்றேன் வாருங்கள்… பேசுவோம்” – என்று அசால்ட்டாகக் கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading