Local

விபத்தில் பொலிஸும் மகளும் பரிதாபப் பலி!

குருநாகல் சாரகம வாவிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அவரது மகளும் உயிரிழந்துள்ளனர்.

ஓட்டோ ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கார் ஒன்றுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

மாவனல்லை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் 30 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரும் அவரது இரண்டு வயது மகளும் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

ஓட்டோவில் பயணித்த அவரது மனைவி, மனைவியின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் படுகாயமடைந்து குருநாகல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் தந்தை ஓட்டோவை ஓட்டிச் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் குருநாகல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading