Local

விமான நிலையம், துறைமுகங்களில் மோப்ப நாய் பிரிவுகள்

நாட்டின் பாதுகாப்புக் கருதி, கட்டுநாயக்க – சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகம் ஆகிய இடங்களில் பொலிஸ் மோப்ப நாய்களின் இரண்டு பிரிவுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் மோப்ப நாய்கள் நடவடிக்கைப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டின் பாதுகாப்புக் கருதியும், போதைப் பொருள் கடத்தல்களை முறியடிக்கும் நோக்கிலுமே, இந்த மோப்ப நாய்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளதாக நடவடிக்கைப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதற்காக 70 பொலிஸ் மோப்ப நாய்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

பொலிஸ் மோப்ப நாய்கள் பிரிவில் 222 நாய்கள் காணப்படுவதுடன், இவற்றில் 60 நாய்கள் வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டு, விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மோப்ப நாய்கள் நடவடிக்கைப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading