Lead NewsLocal

மஹிந்தவின் மகனின் திருமணத்தில் ரணில்!

தங்காலை – வீரக்கொட்டியவில் இன்று நடைபெற்ற மஹிந்த ராஜபக்‌ஷவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷவின் திருமண நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் சில முக்கியஸ்தர்களுடன் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டார்.

பிரதமர் ரணிலுடன் அமைச்சர்களான மங்கள சமரவீர, கபீர் ஹாஷிம், ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இவர்கள் அனைவரும் கொழும்பில் இருந்து ஒரே ஹெலியில் தங்காலைக்குப் பயணத்தை மேற்கொண்டனர்.

திருமண நிகழ்வுக்காக ஹெலியில் வந்து இவர்கள் இறங்கியபோது சற்று பரபரப்பான சூழ்நிலை அங்கு நிலவியது.

இவர்களை இரு கரம் கூப்பி வரவேற்ற ராஜபக்ஷ குடும்பத்தினர் மிகவும் மகிழ்வுடன் அளவளாவினர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading