Local

கல்வித் தகைமைகளை முடிந்தால் நிரூபியுங்கள்! – சஜித்துக்கு ரவி சவால்

முடியுமானால் தனக்கு இருப்பதாகக் கூறும் கல்வித் தகைமைகளை முன்வைக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு அந்தக் கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்க பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“குறைந்தது சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறாவது உள்ள ஒருவரையே ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கவுள்ளோம். தனக்கு கல்வித் தகுதிகள் இருப்பதாக கூறித் திரிவதில் பயனில்லை. அதனை முடியுமானால் ஊடகங்களிடமும் பொதுமக்களிடம் சமர்ப்பிக்கவும்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

சஜித் பிரேமதாஸவின் கல்வித் தகைமை தொடர்பில் ரவி கருணாநாயக்க தொடர்ந்து விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading