Local

தெஹிவளையில் மீண்டும் பொலிஸ் பதிவு ஆரம்பம்! – தமிழருக்குச் சிங்களத்தில் விண்ணப்பப் படிவங்கள்

பொலிஸ் பதிவுகளை மேற்கொள்வதற்காகத் தமிழ் மக்களுக்கு விநியோகிக்கப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் சிங்கள மொழியில் காணப்படுவதால் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

தமிழ் மக்களை பதிவு செய்யுமாறு வலியுறுத்தி தெஹிவளை பொலிஸாரால் நேற்று விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பங்கள் சிங்கள மொழியில் காணப்பட்டன. இதனையடுத்து தமிழ் மொழியிலான விண்ணப்பங்களை மக்கள் கோரியபோதிலும் தற்போதைக்கு ஒரு மொழியிலேயே விண்ணப்பங்கள் காணப்படுவதாகவும் அதனைப் பூர்த்தி செய்து தருமாறும் பொலிஸார் பொறுப்பற்றுப் பதிலளித்துள்ளனர்.

தெஹிவளை பொலிஸாரின் இந்தச் செயற்பாட்டினால் தமிழ் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading