Local

அரசியல் கைதிகளின் விடுதலை விரைவில்!

“அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஆராய்ந்து, விடுவிக்கக் கூடியவர்களை விரைவில் விடுவிக்க எதிர்ப்பார்த்துள்ளோம்.”

– இவ்வாறு தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் மத விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் எதுவித ஒப்பந்தமும் செய்து கொள்ளப்படவில்லை. இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை.

எங்களுக்குள் பேச்சுக்கள் இடம்பெற்றன. அவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளைக் கூறினார்கள். நாம் அதற்கு இணங்கினோம்.

இது தொடர்பில் எங்கள் தலைவரும் (ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்) தெளிவான விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.

அவர்கள் காணிப் பிரச்சினை, அரசியல் கைதிகளின் பிரச்சினை குறித்து கூறினார்கள். இதற்காக அரசியல் கைதிகள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க முடியாது.

இது தொடர்பில் கலந்துரையாடி விடுவிக்கக் கூடியவர்களை விரைவில் விடுவிக்க நாம் எதிர்ப்பார்த்துள்ளோம்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading