Lead NewsLocal

போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பான மஹிந்தவிடம் ஆட்சியா? – மைத்திரி மீது சீறிப் பாய்கின்றார் சமந்தா பவர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகளால் இலங்கையில் ஜனநாயகம் வீழ்த்தப்பட்டுள்ளது என்று ஐ.நாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசியல் குழப்பங்கள் தொடர்பாக தமது ‘ருவிட்டர்’ பக்கத்தில் சமந்தா பவர் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

அதில், “இலங்கையில் மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகளால் ஜனநாயகம் வீழ்த்தப்பட்டுள்ளது.

அவர் பொறுப்புக்கூறலுக்கு உறுதியளித்தார். ஆனால், இப்போது, போர்க்குற்றங்கள், காணாமல் ஆக்கப்படுதலுக்குப் பொறுப்பான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வந்துள்ளார்.

அவசர இராஜதந்திரம் தேவை. இலங்கையர்கள் இதனைக் கையாள வேண்டும். பெருமளவு இரத்தம் சிந்தப்பட்டுள்ளதால் பின்நோக்கித் திரும்ப முடியாது” என்றுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading