World

தமிழக முதல்வராக ஸ்டாலின் ஒருபோதும் வரமாட்டாராம்! – இந்நாள் முதல்வர் பழனிசாமி கூறுகின்றார்

“தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஒருபோதும் தமிழகத்தின் முதலமைச்சராக வரமாட்டார்.”

– இவ்வாறு தமிழகத்தின் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

மதுரை பாண்டிகோவில் சுற்றுசாலை பகுதியில் முதலமைச்சர் பழனிசாமி பேசுகைலேயே அவர் மேற்கண்டவாறு கூறினமார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ‘

“தி.மு.க. என்பது குடும்பக்கட்சி. அ.தி.மு.க. என்பது மக்களின் கட்சி. அவர்கள் ஆட்சிக்காலத்தில் தமிழகத்துக்கு எந்த திட்டங்களும் நிறைவேற்றப்பட்டன எனத் தெரியவில்லை.

மத்தியிலும் கூட்டணி ஆட்சியில் இருந்தார்கள். மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தார்கள். ஆனால், தமிழகம் முன்னேறவில்லை. அவர்கள் குடும்பம் மட்டும் முன்னேறியது.

அ.தி.மு.க. கட்சியில்தான் தொண்டன்கூட எம்.எல்.ஏ-வாக, அமைச்சராக, முதலமைச்சராக கூட வரமுடியும். தி.மு.கவில் கருணாநிதி முதலமைச்சராக இருந்தார். அவருக்குப் பின்னர் ஸ்டாலின் முதல்வராகத் துடிக்கின்றார்.

அது எப்போதும் நடக்காது. அவருக்குப் பின்னர் அவரது மகன் உதயநிதி கட்சிக்கு வர துடிக்கின்றார்.

ஆனால், நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு அவர்களின் கஷ்டம் தெரியும். மக்கள் வசதியாக வாழவே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இலவச மிக்ஸி, கிரைண்டர் கொடுத்தார்.

அ.தி.மு.க. ஆட்சியில்தான் சிறந்த கல்வி வழங்கப்பட்டது” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading