World

இரு அதிவேக ரயில்கள் மோதி கோர விபத்து: 39 பேர் பலி…!!!

ஸ்பெயினில் இரண்டு அதிவேக ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் குறைந்தது 39 பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மாட்ரிட் மற்றும் தெற்கு அந்தலூசியா பிராந்தியத்தை இணைக்கும் ரயில் பாதை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

விபத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவசர வைத்தியக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

விபத்தில் சிக்கிய ரயில்களில் ஒன்று மாட்ரிட்டிலிருந்து செபில்லாவை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக அந்தச் செய்தி கூறுகிறது.

மீட்பு பணிகளுக்காக பல வான்வழி அவசர ஊர்திகள் (air ambulances) களமிறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கோடை மாதங்களில் ஸ்பெயின் முழுவதும் பயணம் செய்யும் பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணிகளிடையே இந்தப் பாதை பிரபலமானது என்று கூறப்படுகிறது, ஏனெனில் இது தலைநகரிலிருந்து தெற்கு கடற்கரைக்கு பயணிகளை அழைத்துச் செல்வதாக கூறப்படுகிறது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading